துணை முதலமைச்சர் இன்று நடைபெற்ற விழாவில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 1,001 பயனாளிகளுக்கு ரூபாய் 80,00,000/- மதிப்பிலும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு, ரூபாய் 74,98,550/- மதிப்பிலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 9,285 பயனாளிகளுக்கு, ரூபாய் 71,24,00,000/- மதிப்பிலும், விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு, ரூபாய் 40,000/- மதிப்பிலும், வேளாண்மை மற்றும் உழவர் நலத் தறை சார்பில் 55 பயனாளிகளுக்கு, ரூபாய் 36,32,310/- மதிப்பிலும், தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் 40 பயனாளிகளுக்கு ரூ.42,50,380/- மதிப்பிலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 16 பயனாளிகளுக்கு, ரூ.61,37,950/- மதிப்பிலும், கூட்டுறவுத் துறை சார்பில் 600, பயனாளிகளுக்கு, ரூபாய் 5,00,00,000/- மதிப்பிலும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் 1,000 பயனாளிகளுக்கு, ரூபாய் 16.00.000/- மதிப்பிலும், சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு, ரூபாய் 44,66,210/- மதிப்பிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு, ரூபாய் 71,620/- மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு, ரூபாய் 33,800/- மதிப்பிலும், தாட்கோ சார்பில் 6 பயனாளிகளுக்கு, ரூபாய் 13,60,180/- மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 50 பயனாளிகளுக்கு ரூபாய் 5,09,000/- மதிப்பிலும், என மொத்தம், 12,100 பயனாளிகளுக்கு, ரூபாய் 80,00,00,000/- கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.விஷ்ணு பிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.கோ.ஐயப்பன், சபா.இராஜேந்திரன், எம்.ஆர்.இராதாகிருஷ்ணன், ம.சிந்தனைசெல்வன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., மேயர் சுந்தரிராஜா, மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி இ.ஆ.ப.,துணை மேயர் பா.தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post கடலூரில் ரூ.23.93 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.