பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயல்பாடானது, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு (VAWG) முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு முக்கிய சர்வதேச தருணமாகும். இது நவம்பர் 25ஆம் தேதி (பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான சர்வதேச தினம்) முதல் டிசம்பர் 10ஆம் தேதி (மனித உரிமைகள் தினம்) வரை நடைபெறுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து செயல்பாடுகளிலும் பாலின அடிப்படையிலான தேவைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் பாலினம் மற்றும் கொள்கை ஆய்வகத்தைக் கொண்ட முதல் முதல் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்பாக பெருமை கொள்கிறது. கடந்த ஜூன் 30ஆம் தேதி சர்வதேச Pride Month-ஐ நினைவுகூரவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டடம் வானவில் வண்ணங்களில் ஒளிரூட்டப்பட்டது.
The post சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பிரச்சாரம்: நவ.25,29 மற்றும் டிச.3,10ல் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்படும் ரிப்பன் கட்டடம்!! appeared first on Dinakaran.