தமிழக மீனவர்கள் 23 பேருக்கு இரண்டாவது முறையாக டிச.3 வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களின் 23 பேருக்கு இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை நீதிமன்றம் இரண்டாவது முறையாக டிச.3 வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 3 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற ஜெரோம், மரிய ரொனால்ட், சரவணன், யாகோப், டைதாஸ், டென்னிஸ், ஆனந்த், அமலதீபன், சுவிதர், கிறிஸ்துராஜா, விஜய், ஜனன், லின்கdன்,சர்மிஸ், சுதாஸ், மார்ஷல் டிட்டோ, தயாளன், தாமஸ் ஆரோக்கிய ராஜ், ஜான் பிரிட்டோ, ஜெயராஜ், சண்முகவேல், அருள், கிங்ஸ்லி ஆகிய 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் ரோந்துப் பணியின் போது, கடந்த 9ம் தேதி சிறைபிடித்தனர்.

அவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 23மீனவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து 23 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன் டிச.3 வரையிலும் இரண்டாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து மீனவர்கள் 23 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர்.

The post தமிழக மீனவர்கள் 23 பேருக்கு இரண்டாவது முறையாக டிச.3 வரை காவல் நீட்டிப்பு: இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: