சென்னை: முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர 44 மருத்துவர்கள் போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தின் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் அருணலதா; தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை வெளிப்படைத்தன்மையுடன் எந்த விதமான முறைகேடுகளும் நடக்காத வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது. மருத்துவ மாணவர் சேர்க்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் சான்றிதழ்களை ஆய்வுக்குட்படுத்தி சரிபார்ப்பது வழக்கம்.
அவ்வாறு ஆவணங்களின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்ததில் நடப்பாண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த 6 பேரின் தூதரக சான்றிதழ்கள் போலியானவை என்பது கண்டறியப்பட்டது. அதில் 3 பேர் எம்பிபிஎஸ் இடங்களுக்கான ஒதுக்கீடு பெற்றவர்களாவர். இதையடுத்து 6 பேரும் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்பதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி அவர்களில் மூவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட எம்பிபிஎஸ் இடங்களும் ரத்து செய்யப்படுகின்றன. போலியாக சான்றிதழ் அளித்த 6 மாணவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
மேலும் முதுகலை மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்க உள்ளது. இந்த இடங்களில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்த மருத்துவர்களில் 44 மாணவர்கள் போலியாக என்ஆர்ஐ சான்றிதழ் அளித்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர 44 மருத்துவர்கள் போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்க்கும் பணியின்போதே போலிச் என்.ஆர்.ஐ. சான்றிதழ் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலிச் சான்றிதழ் கொடுத்த மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை குழு பரிந்துரை செய்துள்ளது.
The post போலி என்.ஆர்.ஐ. சான்றிதழ் – 44 மருத்துவர்கள் பிடிபட்டனர்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை appeared first on Dinakaran.