உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் ரெ.தங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் பா.சந்தானகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.நசீம், மாநில துணைப் பொதுச் செயலாளர் க.இளங்கோவன், டி.பி.ரமேஷ், பா.சக்திவேல், மாவட்ட நிர்வாகிகள் கி.பத்மநாபன், எம்.பெருமாள், ஆர்.சீனிவாசன், மு.ப.சித்தார்த்தன், ஹரிகணேஷ், வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், சைமன், கரம்பக்குடி வே.ராஜு, செந்தில், சரஸ்வதி, தெய்வானை, தமிழ்ச்செல்வி, பவானி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடுவது, தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் திருநாளையொட்டி மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், புத்தாடைகள் வழங்கி சமத்துவப் பொங்கல் கொண்டாடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள்: மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: