இதுவரை சதுர அடிக்கான தொழில்வரி ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே, குடிசைத் தொழில் போல வீடுகளிலேயே தறிகளை வைத்து நெசவு வேலை செய்து வரும் நெசவாளர்களுக்கு தொழில் வரி விதிக்க முற்படுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானதாகும். அங்கீகரிக்கப்பட்ட நூற்பாலைகளிலிருந்து தரமான நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு, உரிய தரப்பரிசோதனை செய்யப்பட்டு கைத்தறி துணி உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வகையில் 2023-2024ம் ஆண்டில் ரூ.54.42 கோடி மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது . மேலும், மாதந்தோறும் நூல்விலை நிர்ணயக் குழுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு நூல்விலை கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. எனவே, நூல் விலை உயர்வால் நெசவாளர்கள் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பான ஆதாரமற்றதாகும்.
அதிமுக ஆட்சியில், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இரண்டு மாதத்திற்கு முறையே 200 அலகுகள் மற்றும் 750 அலகுகள் மின்சாரம் என்பதை 2023ம் ஆண்டு முதல் முறையே 300 அலகுகளாகவும், 1000 அலகுகளாகவும் உயர்த்தி தற்போதைய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 75364 கைத்தறி நெசவாளர்களும், 1,62,799 விசைத்தறி நெசவாளர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த அ.தி.மு.க ஆட்சியல் நெசவாளர்கள் வீடு கட்டுவதற்கு ரூ.2.60 லட்சம் மட்டுமே ஒரு நெசவாளருக்கு வழங்கப்பட்டது.
ஆனால், இக்கழக ஆட்சியில் ரூ.4 லட்சமாக உயர்த்தி, நகர்ப்புற மற்றும் ஊரக நெசவாளர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு..ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு பொறுப்பேற்றது முதல், வேறு எந்த அரசை விடவும், நெசவாளர்கள் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி, பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை செவ்வனே செயல்படுத்தி வரும் நிலையில், இவற்றை ஏதும் அறியாத சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர், வாய்க்கு வந்தவாறு செவிவழிச் செய்திகளைக் கேட்டு, உரிய தரவுகள் ஏதுமின்றி, உண்மைக்கு புறம்பான கருத்துகளை அரசியல் ஆதாயத்திற்காக வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post நெசவாளர்களுக்கு தொழில்வரி விதிப்பது தொடர்பாக கைத்தறித்துறையால் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி கண்டனம் appeared first on Dinakaran.