இவ்வாண்டு 1,353 மருத்துவர் காலிபணியிடங்கள் உள்ளது. இக்காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முடிவெடுத்தபோது, ஒவ்வொரு வருடமும் 1200 அளவுக்கு மருத்துவ பணியிடங்கள் காலிப்பணியிடங்களாக இருந்து வருகிறது. 2025 மற்றும் 2026 ஆண்டுகளுக்கு சேர்த்து மருத்துவ தேர்வாணையம் மூலம் மருத்துவர்களை தேர்வு செய்யதமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், மருத்துவர் நியமனத்திற்கான தேர்வு 2025 ஜனவரி முதல் வாரத்தில், இதற்காக விண்ணப்பித்துள்ள 24 ஆயிரம் மருத்துவர்களுக்கும் டாடா கன்சல்டன்சி மூலம் ஒரே நேரத்தில் தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு 10 நாட்களில் பணிநியமன ஆணை வழங்கப்படவுள்ளது. இவ்வாறு செய்வதால் 2026ம் ஆண்டிற்கு சேர்த்து மருத்துவர்கள் தேர்வின் மூலம் நியமிக்கப்படுவதால் தமிழ்நாட்டில் ஒரு மருத்துவ பணியிடம் கூட காலியாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
The post மருத்துவர் நியமன தேர்வு ஜனவரியில் நடத்த நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் appeared first on Dinakaran.