பின்னர் நாகப்பட்டினம் அவுரித் திடலில் மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், 2,500 பயனாளிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பில் ஐஸ்பெட்டி, மீன்பிடி உபகரணம், மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணம், தூய்மை பணியாளர்களுக்கு, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த விழாக்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் முதலாக பெண்கள் பேருந்தில் இலவச பயணம் செய்ய விடியல் பயணம் திட்டத்தை கொண்டு வந்தார். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைந்து வருகின்றனர்.
காலை உணவு திட்டத்தில் தினந்தோறும் 20 லட்சம் குழந்தைகள் பயன் அடைந்து வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கும் உயர் கல்வி படிப்பதற்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. இப்படிப்பட்ட திட்டங்களினால் தான் இந்தியாவே தமிழகத்தை திரும்பி பார்க்கின்றது. இதையெல்லாம் பார்க்கும் போது எதிர்க்கட்சிக்காரர்களுக்கு பொறாமை ஏற்படத்தான் செய்யும்.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகமாக வயிற்று எரிச்சல். காலமெல்லாம் தமிழகத்துக்கு உழைத்த கலைஞர் பெயரை ஏன் எல்லா திட்டத்திற்கும் வைக்கிறீர்கள் என வயிற்று எரிச்சல். நம்முடைய கூட்டணி உடையாதா, ஏதாவது விரிசல் ஏற்படாதா என்று காத்து கிடக்கிறார்கள். அதிமுக கள ஆய்வு என்ற பெயரில், கட்சிக்குள் அடிதடி நடத்துகிறது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கள ஆய்வில் பேசும் போது, கூட்டணி கட்சியில் சேர ரூ.200 கோடி கேட்கின்றனர்.
20 சீட்டு கேட்கிறான் என்றெல்லாம் கூறுகிறார். அங்கே கூட்டணிக்கு பேரம் நடக்கிறது. ஆனால் திமுக கூட்டணி கொள்கை கூட்டணி, வெற்றி கூட்டணி, மக்கள் ஏற்றுக் கொள்ளும் கூட்டணி. நம்முடைய தலைவர் எப்படி கடந்த தேர்தலில் வெற்றி கூட்டணி அமைத்தாரோ அதேபோல் இந்த முறை கண்டிப்பாக தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளும் வெற்றி கூட்டணியை அமைப்பார். 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான தேர்தல். இந்த தேர்தலில் கழகத் தலைவர் 234ல் 200 தொகுதி வெற்றி பெற வேண்டும் என்று கூறி உள்ளார். கழகத்தினர் அனைவருக்கும் அதை நோக்கியே பயணம் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த திமுக அரசின் திட்டங்களால் எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.