ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

சென்னை: சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் நேற்று நடந்த ஜானகி எம்ஜிஆர் நுாற்றாண்டு விழாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார். வீடியோவில் ரஜினி பேசியிருப்பதாவது: தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி அம்மையார் நூற்றாண்டு விழாவுக்கு வாழ்த்து. அவரை 3 முறை சந்தித்து பேசி உள்ளேன். அன்பாக பழக கூடியவர். எம்.ஜி.ஆர்., மறைந்த பிறகு, இக்கட்டான சூழல் காரணமாக ஜானகி அரசியலுக்கு வந்தார்.

அரசியல் எனக்கு ஒத்துவராது என்று கூறி ஜெயலலிதாவிடம் இரட்டை இலையை ஒப்படைத்தார். அவர் கட்சி நலன், மக்கள் நலன் கருதி அரசியலில் இருந்து விலகி ஜெயலலிதாவிடம் பொறுப்பை கொடுத்தார். எம்.ஜி.ஆருக்காக திரை வாழ்க்கையை தியாகம் செய்து கடைசி வரை அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஜானகி. அ.தி.மு.க.வின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை. அது கிடைப்பதற்கு ஜானகி மிகப்பெரும் தியாகம் செய்தார். அவருடைய அந்த குணம் பாராட்டத்தக்கது. இவ்வாறு ரஜினி பேசியுள்ளார்.

The post ஜானகி எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: