ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் டிசம்பர் 4, 5, 6ம் தேதிகளில் நடக்கிறது

சென்னை: ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் வரும் டிசம்பர் 4, 5, 6ம் தேதிகளில் நடைபெற உள்ளது. ரயில்வேயின் 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தயாராகி வருகின்றன. தெற்கு ரயில்வேயில், அங்கீகாரத் தேர்தலில் போட்டியிடும் ரயில்வே தொழிங்சங்கங்களின் இறுதிப்பட்டியலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் அங்கீகாரத்தில் இருக்கும் எஸ்ஆர்எம்யு, காங்கிரஸ் கட்சியின் எஸ்ஆர்இஎஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் டிஆர்இயு, பாஜகவின் டிஆர்கேஎஸ் உள்ளிட்ட 6 சங் கங்கள் களத்தில் உள்ளன.

10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கீகாரத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தொழிற்சங்கங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 76 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எஸ்.ஆர்.எம்.யு. எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு., எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ், எனப்படும் தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பாஜக தொழிற் சங்கம் முதன்முறையாக கள மிறங்குகிறது. வட மாநிலத்தவர்கள் அதிகம் பணிபுரிவதால் தொழிற்சங்கங்கள் இந்தி மொழியில் துண்டு பிரச்சாரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் டிசம்பர் 4, 5, 6ம் தேதிகளில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: