292வது பிறந்த தினம் வேலுநாச்சியாருக்கு பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: சிவகங்கை ராணி வேலுநாச்சியாரின் 292வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி வாழ்த்தி பேசினார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் பெண் போராளிகளில் குறிப்பிடத் தகுந்தவர்கள் பட்டியலில் சிவகங்கை ராணி வேலுநாச்சியாரும் ஒருவர் ஆவார். இழந்த மண்ணை மீட்டு மீண்டும் அரியணை ஏறிய மகாராணி வேலுநாச்சியாரின் 292வது பிறந்த தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி, பிரதமர் மோடி ராணி வேலுநாச்சியாரை போற்றும் வகையில் தனது டிவிட்டரில் தமிழில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அதில், `வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது வீரமும், துணிச்சலும் எதிர்கால தலைமுறையினருக்கு எழுச்சியூட்ட கூடியவை. அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன்’ என்று கூறியுள்ளார்….

The post 292வது பிறந்த தினம் வேலுநாச்சியாருக்கு பிரதமர் மோடி புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: