விருதுநகர், நவ.23: விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார். கலெக்டர் பேசுகையில், அனைவரும் பள்ளியில், காப்பகத்தில் நன்றாக படிப்பது போல், விளையாட்டும் மிக முக்கியம். மாற்றுத்திறனுடைய குழந்தைகள் விளையாட்டு பயிற்சிகள் செய்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். மகிழ்ச்சிக்காகவும், உடல் நலனுக்காகவும் விளையாடலாம்.
அனைவரும் தொடர்ச்சியாக விளையாடி பயிற்சி எடுத்தால் தேசிய அளவில் பல்வேறு நாடுகளில் நடக்கும் பாரா ஒலிம்பிக் மற்றும் அது தொடர்பாக நடத்தப்படும் அனைத்து போட்டிகளிலும் பங்கு பெறலாம். தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்று பதக்கங்கள் பெற்று இருக்கின்றனர்.
அதனால் அனைவரும் படிப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டிற்கும் கொடுக்க வேண்டும். டிச.3ல் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது என தெரிவித்தார். நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமார மணிமாறன், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
The post மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.