மதுரை, மார்ச் 10: மதுரையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதன்படி கே.புதூர் பேருந்து நிலையம் பகுதியில் நடந்த தெருமுனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கற்பகவள்ளி, பொருளாளர் முத்துலட்சுமி, துணை செயலாளர் ஜாகீர்நிஷா, துணை தலைவர் சுகந்தா முன்னிலை வகித்தனர். மாதர் சம்மேளன தேசிய குழு உறுப்பினர் நிஷா சத்தியன் மகளிர் தினம் குறித்து சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாககவுன்சிலர்கள் அந்தோணியம்மாள் ராயன், முத்துக்குமாரி ஆழ்வார், திமுக மகளிர் அணி அமைப்பாளர் சரவண புவனேஸ்வரி, ராதா பங்கேற்றனர். ஒன்றிய அரசு பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பொது சொத்துகளை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது. பாலியல் வன்முறையை தூண்டும் சமூக ஊடகங்களை தடை செய்ய வேண்டும். சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் நிறைவேற்ற வேண்டும். பெண் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
