நாளடைவில் இந்த பழக்கம், காதலாக மாறியது. அப்போது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஹேமாவுடன் ஜோதிஸ் உல்லாசமாக இருந்துள்ளார்.
பின்னர், திருமணம் செய்ய மறுத்ததுடன், தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க ஹேமாவை கட்டாயப்படுத்தி உள்ளார். அவர்களும் ஹேமாவிடம் ஆபாசமாக பேசியுள்ளனர். இதனால், மன உளைச்சல் அடைந்த ஹேமா இதுகுறித்து புளியந்தோப்பு துணை ஆணையரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜோதிஸ் மற்றும் அவரது நண்பர்களான மருந்து விற்பனை பிரதிநிதி தரணி குமார் (33), கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த இன்ஜினியர் புவனேஷ்வரன் (32) ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
The post இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபர் கைது: கூட்டாளிகளும் சிக்கினர் appeared first on Dinakaran.