அமணலிங்கேஸ்வரர் கோயிலில் ரூ.1.47 லட்சம் உண்டியல் காணிக்கை

உடுமலை, நவ.21: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக, அமாவாசை, பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோயில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல்கள் திறந்து எண்ணப்படுகின்றன.

பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, கோயில் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்து செல்லும். அப்போது, உண்டியல்களுக்குள் தண்ணீர் சென்றுவிடாமல் இருக்க சுற்றிலும் பாலிதீன் கவர்கள் கொண்டு மூடப்பட்டிருக்கும். இரு தினங்களுக்கு முன்பு கூட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றது. கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். எண்ணிக்கை முடிவில் பக்தர்கள் 1 லட்சத்து 47 ஆயிரத்து 438 ரூபாய் காணிக்கை செலுத்தி இருப்பது தெரியவந்தது.

The post அமணலிங்கேஸ்வரர் கோயிலில் ரூ.1.47 லட்சம் உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: