எல்ஐசி இணையதளத்தில் இந்தி திணிப்பு: முதல்வர் கண்டனம்

சென்னை: எல்.ஐ.சி. இணையதளத்தில் இந்தி திணிப்பை கண்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: எல்.ஐ.சி. இணையதளம் இந்தி திணிப்புக்கான கருவியாக சுருக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழிக்கு மாற்றுவதற்கான தெரிவும் கூட இந்தியில்தான் உள்ளது.

இது இந்தியாவின் மொழிப் பன்மைத்துவத்தை நசுக்கும் வலுக்கட்டாயமான பண்பாட்டு, மொழித் திணிப்பேயன்றி வேறல்ல. இந்தியர்கள் அனைவரின் ஆதரவோடும் வளர்ந்ததுதான் எல்.ஐ.சி. அத்தகைய நிறுவனம் தனது வளர்ச்சிக்கு பங்களித்த பெரும்பான்மையான மக்களை இப்படி வஞ்சிக்கத் துணியலாமா? உடனடியாக இந்த மொழிக் கொடுங்கோன்மையை நிறுத்தி பழையபடி ஆங்கிலத்துக்கு மாற்ற வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post எல்ஐசி இணையதளத்தில் இந்தி திணிப்பு: முதல்வர் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: