2025ம் ஆண்டுக்கான சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16ம் தேதி தொடங்கி 18ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடக்க உள்ளது. அதில் இத்தாலியை சேர்ந்த பொலோனியா பன்னாட்டு குழந்தைகள் புத்தகக் கண்காட்சி நிறுவனம் கலந்து கொள்ள இருக்கிறது. இந்த ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய 39 நூலகர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்பு சான்றுடன், வெள்ளிப் பதக்கம், மற்றும் ரூ.5000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. அதேபோல சிறந்த நூலகங்களுக்கான சிறப்புப்பரிசுகள், மைய நூலகம், முழு நேர கிளை நூலகம், கிளை நூலகம் மற்றும் ஊர்ப்புற நூலகங்களுக்கு தலா 4 கேடயங்கள் என 12 கேடயங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
* ரூ.69 கோடிக்கு விற்பனை
கடந்த ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டதில், 86 லட்சத்து 44 ஆயிரத்து 190 பொதுமக்கள் பார்வையிட்டு அதில் ரூ.69 கோடியே 20 லட்சம் மதிப்பில், 81 லட்சத்து 44 ஆயிரத்து 525 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டது போல, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா ரூ.6 கோடி மதிப்பில் மாவட்ட மைய நூலகம் ஏற்படுத்தும் பணி நடக்கிறது. இதுதவிர கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் தொடங்கப்பட உள்ளது. மேலும் தூத்துக்குடி, ஈரோடு மாவட்டத்தில் புதியதாக மாவட்ட மைய நூலகம் கட்டப்பட உள்ளன.
The post சென்னையில் ஜனவரி 16ம் தேதி தொடங்கி 3 நாள் பன்னாட்டு புத்தக திருவிழா: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு appeared first on Dinakaran.