நெல்லை, நவ.19: மழைக்காலத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட ஆதிதிராவிட நல விடுதிகளில் கொசு மருந்து அடிக்க கோரி ஆதிதிராவிட நலக்குழுவினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். நெல்லை மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் பேரங்காடி அய்யப்பன் தலைமையில் உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைப்பினர், நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவில் ்்அவர்கள் கூறியிருப்பதாவது: தற்போது வடகிழக்கு பருவமழைக்காலம் துவங்கியுள்ளது. மாறிவரும் பருவநிலை மாற்றத்தால் கொசுக்கள் தொந்தரவு அதிகரித்து வருகிறது. கொசுக்களால் வரும் நோய்களை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை மாவட்ட ஆதிதிராவிட நல விடுதிகளில் கொசு மருந்து அடித்து தரும்படி கேட்டு கொள்கிறோம். மேலும் விடுதிகளில் மாணவ, மாணவியர்களுக்கு பாதுகாப்பு நல்கிடும் வகையில், விடுதிகளின் மதில் சுவர்கள் மேல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post நெல்லை மாவட்ட ஆதிதிராவிட நல விடுதிகளில் கொசுமருந்து அடிக்க கோரிக்கை appeared first on Dinakaran.