குறிப்பாக, பள்ளி, கல்லூரி செல்வோர், அலுவலகம் செல்வோரின் முதல் தேர்வாக இருப்பது பேருந்துகள் தான். சென்னையில் மொத்தம் 625 வழத்தடங்களில் தினசரி 3,436 பேருந்துகளில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இதனால் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையும் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிப்படைகிறது. குறிப்பாக, சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களில் பச்சை விளக்கு ஒளிரும் போதும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக பின்னால் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில் அரசு பேருந்துகள் நெரிசலில் சிக்குவதை தவிர்க்கவும் பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்தும் மாநகர போக்குவரத்து கழகம் ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரி கூறியதாவது: சென்னையில் பல்வேறு இடங்களில் வருடக்கணக்கில் பேருந்து நிறுத்தங்கள் இடம் மாற்றப்படாமல் உள்ளன. அதன்படி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டு, தற்போது சிக்னல் மற்றும் மேம்பாலங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் முன்பாகவோ அல்லது பின்பாகவோ இருக்கும் வகையில் மாற்ற உள்ளோம். முதற்கட்டமாக பாரிமுனை – முகப்பேர் (7எம்), வடபழனி – தரமணி (5டி) இடையேயான வழித்தடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்களை ஆய்வு செய்து மாநகராட்சியிடம் சமர்ப்பித்துள்ளோம். இந்த நடவடிக்கையால் முக்கிய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்ப்பார்க்கிறோம். மேலும், சென்னையில் உள்ள அனைத்து பேருந்து நிறுத்தங்களை விரைவில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த இடமாற்ற நடவடிக்கைகளை மாநகராட்சி மூலமாக மேற்கொள்ள உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிக்னல், மேம்பாலம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம்: போக்குவரத்து கழகம் தகவல் appeared first on Dinakaran.