தண்டையார்பேட்டை: ராயபுரத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி கோரிக்கை மனு அளித்துள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர், உயர் அதிகாரிகள் இணைந்து சென்னையில் உள்ள சாலைகள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், உள்கட்டமைப்பு தொடர்பாக பரிந்துரைகள் மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, ராயபுரம் தொகுதி 53வது வார்டு போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணிய விரைவில் முடிக்க வேண்டும், ராயபுரம் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிரமப்படுவதால் ராயபுரம் மன்னார்சாமி கோயில் சிக்னலில் இருந்து மீன்பிடி துறைமுகம் காவல் நிலையம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு வழங்கினார்.
The post ராயபுரத்தில் மேம்பாலம்: துணை முதல்வரிடம் எம்எல்ஏ கோரிக்கை appeared first on Dinakaran.