அந்த வகையில் இந்த தரநிலையை சென்னை மாநகராட்சி அடைவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி பகுதிக்குட்பட்ட வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் அனைத்து வீட்டு உபயோக நீர் மற்றும் கழிவுநீர் சேகரிக்கப்பட்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் கசடு சுத்திகரிப்பு நிலையம் மூலம் மறுசுழற்சி செய்து மீண்டும் மாற்றுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த நடைமுறை சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் பின்பற்றப்படுகிறது. இதனால் நீர் + நகரம் எனும் தரநிலையை அடைய சென்னை மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, solidwastecorp7@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம், என கூறப்பட்டுள்ளது.
The post சென்னை மாநகராட்சி சார்பில் கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் திட்டம்: பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.