* மாநகரப் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் தங்கள் சொந்த உபயோகத்திற்காக தோள்களில் மாட்டி செல்லக்கூடிய பைகள், துணிகள் அடங்கிய கைப்பெட்டிகள், பைகள், கேமரா போன்ற கையடக்கமான சாதனங்கள், லேப்டாப், சிறிய அளவிலான கையில் எடுத்து செல்லத்தக்க மின்சாதன பொருட்கள் போன்றவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள், கலை நிகழ்ச்சிக்கு செல்லும் நாட்டுப்புற கலைஞர்கள் கொண்டு செல்லும் வாத்திய கருவிகள் முதலியவை இலவசமாக ஏற்றிச் செல்ல கூடிய சுமைகளாகும். இதற்கு சுமைக் கட்டணம் கிடையாது.
* மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் தங்கள் உைடமைகளை எடுத்துச் செல்ல டிராலி வகையான சூட்கேஸ்கள் அதிகபட்சமாக 65 செ.மீ அளவுள்ள சூட்கேஸ்கள் மற்றும் பைகள் ஆகியவைகளை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம்.
* பேருந்துகளில் ஒரு பயணி சொந்த உபயோகத்திற்கான 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கலாம்.
* பயணிகள் எடுத்துவரும் 65 செமீ அளவிற்கு மேல் உள்ள டிராலி வகையான சூட்கேஸ்கள் மற்றும் பெரிய பைகள், 20 கிலோவிற்கு மேல் சுமைகளுக்கு ஒரு பயணிக்கான பயணக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
* 20 கிலோவுக்கும் குறைவான வணிக நோக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும் சுமைகளுக்கு ஒரு பயணிகளுக்கான பயண கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்.
* அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள், கடத்தல் பொருட்கள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அனுமதிக்கக் கூடாது.
* பேருந்தில் அதிக இடத்தை ஆக்கிரமித்து மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பெரிய சுமைகளை அனுமதிக்கக் கூடாது.
* சக பயணிகளை பாதிக்கும் ஈரமான சுமைகளை அனுமதிக்கக் கூடாது. பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக் கூடாது.
* செய்தித்தாள்கள் மற்றும் தபால்களை கொண்டு செல்ல, முன் அனுமதி பெற வேண்டும்.
The post பேருந்துகளில் பயணிகளின் சுமைகளுக்கு விதிமுறைகளை பின்பற்றி கட்டணம் வசூலிக்க வேண்டும்: மேலாண் இயக்குனர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.