கல்பாக்கம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை: மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம்

 

திருக்கழுக்குன்றம், நவ. 17: செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் கல்பாக்கம் அடுத்த பதுப்பட்டினத்தில் நடந்தது. கட்சியின் மாவட்ட தலைவர் முகம்மது ரபி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செங்கை யூனூஸ், மாவட்ட பொருளாளர் முஸ்தபா, முன்னாள் மாவட்ட தலைவர் சலீம்பாஷா, சம்சுதீன், அப்துல் ஜப்பார், அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மணப்பாறை எம்எல்ஏவும், கட்சியின் பொதுச்செயலாளருமான ப.அப்துல் சமது கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், வரும் டிசம்பர் 6ம்தேதி சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் (சென்னை மண்டலம் சார்பில்) கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகமானோர் கலந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமீன், தலைமை பிரதிநிதி அச்சரப்பாக்கம் ஷாஜகான் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முடிவில் இப்ராகிம் நன்றி கூறினார்.

The post கல்பாக்கம் அணுமின் நிலைய வேலைவாய்ப்பில் கிராமப்புற இளைஞர்களுக்கு முன்னுரிமை: மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: