டி.வாடிப்பட்டி ஊராட்சியில் கிராமப்புற தொழில்முனைவோர் அபிவிருத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

தேவதானப்பட்டி, நவ. 17: மேரிமாதா கல்லூரி மற்றும் உன்னத் பாரத் அபியான் இணைந்து கிராமப்புற தொழில்முனைவோர் அபிவிருத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியினை டி.வாடிப்பட்டி ஊராட்சியில் நடத்தியது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மேரிமாதா கல்லூரியின் முதல்வர் ஐசக் தலைமை வகித்தார். காந்திகிராமம் கிராமப்புற கல்விக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். மாவட்ட தொழில்மைய (கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரங்கள்) உதவி இயக்குனர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கிராமப்புற தொழில் முனைவு நடவடிக்கைகளின் முக்கியத்துவம், கிராமப்புற தொழில் முனைவோரின் வளர்ச்சியும், சுயதொழில் வழிகளில் கிராமப்புற முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசப்பட்டது.டி.வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்காரஜ், துணைத்தலைவர் இந்துராணி, சில்வார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம், ஊராட்சி செயலர் வீரபத்திரன், எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ், ஊராட்சி செயலர் பாண்டியராஜ் உடனிருந்தனர்.

The post டி.வாடிப்பட்டி ஊராட்சியில் கிராமப்புற தொழில்முனைவோர் அபிவிருத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: