பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் 150வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் கலந்து கொண்டார். இதனையடுத்து தியோகர் சென்ற பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி செல்வதற்காக புறப்பட்டார். அப்போது பிரதமர் மோடியின் இந்திய விமானப்படை விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரதமர் மோடி சுமார் இரண்டு நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்படும் என்று பிரதமர் மோடி காத்திருந்த நிலையில் அந்த பிராந்தியத்தில் இதர விமானங்கள் பறக்க தடை அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் மாற்று சிறப்பு விமானம் மூலமாக பிரதமர் மோடி தியோகரில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். தேர்தல் ஆணையத்தில் புகார்: ராகுலின் ஹெலிகாப்டர் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இது பாதுகாப்பு குறைபாடு மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஜார்க்கண்ட் தேர்தலில் சமமான களம் பராமரிக்கப்பட வேண்டும்.
தேர்தல் பேரணிக்காக ராகுல்காந்தி ஜார்க்கண்ட் சென்றிருந்தார். மாநிலம் முழுவதும் அவர் பயணம் செய்வதற்கும், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தேர்தல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி ராகுல் கோடாவில் இருந்து புறப்படுவதற்கு தயாரான நிலையில், விமானங்கள் பறக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு சமமான களத்தை உறுதி செய்ய வேண்டும் என தெரவிக்கப்பட்டுள்ளது.
* தமிழர் கடையில் செல்பி எடுத்த மோடி
பழங்குடியின தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பீகார் மாநிலம் ஜமுய் நகரில் பழங்குடியின மக்கள் சார்பில் வைக்கப்பட்ட கண்காட்சியை பிரதமர் மோடி பார்வையிட்டார். அங்கு தமிழ்நாட்டில் அரியலூரை சேர்ந்த தர்மதுரை, எழிலரசி தம்பதியினர் ஒரு கடை அமைத்து இருந்தனர்.
பிரதமர் மோடி அந்த கடைக்கு சென்று அவர்கள் வைத்திருந்த பொருட்களை பற்றி கேட்டறிந்தார். அப்போது தர்மதுரை, எழிலரசி தம்பதியினர் பிரதமர் மோடியுடன் ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து பிரதமர் மோடி, அவர்களுடன் உற்சாகமாக செல்பி எடுத்துக்கொண்டார்.
* ராகுலின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு
ஜார்க்கண்டின் கோடாவில் மக்களவை எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி இரண்டாவது கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக வந்திருந்தார். பிரதமர் விமானம் புறப்படுவதில் தாமதம் ஆனதால் அந்த பகுதியில் இதர விமானங்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக ராகுல்காந்தியை அழைத்து செல்வதற்காக வந்திருந்த ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. விமான நிலையத்தில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின் பிரதமர் மோடி சென்ற பிறகே ராகுலின் ஹெலிகாப்டருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
* ஜார்க்கண்ட் மாநிலம் கோடாவில் பிரசாரத்தை முடித்து விட்டு கிளம்பும்போது அவர் பயணிக்கவிருந்த ஹெலிகாப்டருக்கு விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை. இதனால் ஹெலிகாப்டரில் அமர்ந்திருந்தார்.
The post ஜார்க்கண்டில் விமான கோளாறு காரணமாக 2 மணி நேரம் காத்திருந்த பிரதமர் மோடி: ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பால் ராகுலும் தவிப்பு appeared first on Dinakaran.