குஜராத்தில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 8 ஈரானியர்கள் கைது!

குஜராத்: குஜராத் மாநிலத்தில் 700 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே உள்ள இந்திய எல்லை கடற்பரப்பில் 8 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை கண்ட இந்திய கடற்படையினர், ஒன்றிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் குஜராத் காவல்துறையினர் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது படகில் வந்தவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து படகில் சோதனை மேற்கொண்டபோது போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் 700 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 8 ஈரானியர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தில் ஓரே நாளில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குஜராத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

The post குஜராத்தில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: 8 ஈரானியர்கள் கைது! appeared first on Dinakaran.

Related Stories: