இதையடுத்து தங்களை முந்தி செல்லும் காரை முந்தி செல்லும் எண்ணத்தில் அதுல் அகர்வால் 100கி.மீ, வேகத்தில் காரை ஓட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் இன்னோவா கார் மோதி சுக்குநூறாக சிதைந்தது.
இந்த பயங்கர விபத்தில் அதுல் அகர்வால் உள்பட 6 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த பயங்கர விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், அதுல் அகர்வால் தன் நண்பர்களுடன் மது அருந்தி விட்டு போதையில் அதிவேகமாக காரை ஓட்டி சென்றதாக தெரிய வந்துள்ளது.
The post மதுபோதையில் 100கி.மீ. வேக பயணம் உத்தரகாண்டில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதி பயங்கர விபத்து: 6 பேர் உடல் நசுங்கி பலி appeared first on Dinakaran.