சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள சாரதாம்மாள் கோயில் நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்த சிருங்கேரி சங்கரமடாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மீனாட்சி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் கலந்து கொள்ளும்படியும், வருகை பதிவு எடுக்கப்படும், கலந்து கொள்ளாத மாணவிகளின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாது என்று கல்லூரியின் பேராசிரியர் நீலிமா பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது அதில், அனைவருக்கும் வணக்கம், நாளை மாலை 3 மணிக்கு அனைவரும் எம்.எஸ்.ஆடிட்டோரியத்தில் அசம்பல் ஆகணும். இதை ரொம்ப கண்டிப்புடன் செக்ரட்ரி சொல்லியிருக்கிறார்கள். லேட்டாகவும் என்பதால் உங்களுடைய பெற்றோர்களை வந்து கூப்பிட்டுச் செல்லும்படி கூறலாம்.
ஒரு மாணவி கூட வரவில்லை என்றால் ரிசல்ட் வெளியே விடமாட்டார்கள். அப்புறம் நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள் என்ன பண்ண வேண்டும் என்று, என்னால் ஒன்றும் பண்ண முடியாது. ஏன் இந்த வகுப்பில் இருந்து வரவில்லை என்று கேட்டால் யாருக்கும் விருப்பம் இல்லை என்று நான் சொல்லிவிடுவேன். ஏதாவது ஒருநாள் கூட கல்லூரிக்கு உதவி பண்ண மாட்டீர்களா, அப்படி பண்ணவில்லை என்றால் இந்த கல்லூரியில் படித்து என்ன பயன்? கிறிஸ்துவ, முஸ்லிம் மாணவிகள் ஆனால் பரவாயில்லை. இந்து மாணவிகள் கூட வராமல் பொய் சொன்னால் என்ன செய்வது, வரவில்லை என்றால் பின் விளைவுகளை சந்தித்து தான் ஆக வேண்டும் என்று கல்லூரி பேராசிரியர் நீலிமா மாணவிகளிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து அனைத்து தரப்பு மாணவிகள் படிக்கும் கல்லூரியில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதையும், பேராசிரியர் மாணவிகளுக்கு மிரட்டல் விடுப்பதையும் கண்டித்து கல்லூரியின் முன்பு இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
The post கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் மதரீதியான நிகழ்ச்சியில் பங்கேற்க கோரி மாணவிகளுக்கு பேராசிரியை மிரட்டல்: ஆடியோ வைரல் appeared first on Dinakaran.