கோயம்பேடு காவல் நிலையத்தில் கழிப்பறை வசதியின்றி காவலர்கள் தவிப்பு

அண்ணாநகர்: கோயம்பேடு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, அனைத்து மகளிர் மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவுகள் செயல்ப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு தனித்தனியாக கழிப்பறைகளும் உள்ளன. இங்குள்ள ஆண்கள் கழிப்பிடம் முறையான பராமரிப்பின்றி, அசுத்தமாகவும், கதவுகள் உடைந்த நிலையிலும் காணப்படுகிறது.

இதனால், இந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் காவலர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். தற்போது வேறு வழியின்றி, பெண் காவலர்களின் கழிப்பறையை ஆண் காவலர்கள் பயன்படுத்தி வரும் நிலை உள்ளது. இதுகுறித்து காவல் உயர் அதிகாரியிடம் முறையிட்டும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பொதுமக்களும் இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பறை இன்றி சிரமப்படுகின்றனர்.

எனவே ஆண் காவலரின் கழிப்பறையை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து காவலர்கள் கூறுகையில், ‘‘மக்களுக்காக சேவையாற்றும் எங்களுக்கு, கழிப்பறை கூட இல்லாததால், அவசரத்துக்கு பெண் காவலரின் கழிப்பறையை பயன்படுத்தி வரும் நிலை உருவாகியுள்ளது. எனவே, ஆண்கள் கழிப்பறையை சீரமைத்து தர வேண்டும்,’’ என்றனர்.

The post கோயம்பேடு காவல் நிலையத்தில் கழிப்பறை வசதியின்றி காவலர்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: