×

போதையில் கிணற்றில் விழுந்து விவசாயி பலி

கிருஷ்ணகிரி, நவ.13: கிருஷ்ணகிரி அடுத்த சோக்காடி அருகேயுள்ள பூமாகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(45), விவசாயி. இவர் கடந்த 8ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் மீண்டும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். நேற்று முன்தினம் அதேபகுதியில் உள்ள விவசாய கிணற்றில், கோவிந்தசாமி சடலமாக மிதந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், டேம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கோவிந்தசாமி உடலை மீட்டு விசாரித்தனர். அதில், மதுஅருந்தும் பழக்கம் கொண்ட கோவிந்தசாமி, போதையில் நடந்து செல்லும்போது கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post போதையில் கிணற்றில் விழுந்து விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Govindaswamy ,Bhumakottai ,Chokkady ,Dinakaran ,
× RELATED 17ம் நூற்றாண்டை சேர்ந்த திருவண்ணாமலை ஜோதி குறியீடுடன் 3 கல்வெட்டுகள்