×

அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஆய்வு

ஓசூர், நவ.13: ஓசூர் மாநகராட்சி 12வது வார்டிற்குட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஆய்வு செய்தார். ஓசூர் மாநகராட்சி 12வது வார்டிற்குட்பட்ட பாப்பண்ண தோட்டம், நேதாஜி பூங்கா பின்புறம், பிருந்தாவன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், தார் சாலை, குடிநீர் பிரச்னை நிலவி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதன்ன்பேரில், நேற்று அப்பகுதியில் ஓசூர் மாநகர மேயர் சத்யா ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது, கவுன்சிலர்கள் பெருமாயி அருள், சான்பாஷா, சைனு சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post அடிப்படை வசதிகள் குறித்து மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Hosur ,Papanna Garden ,12th Ward ,Hosur Municipality ,Netaji Park Rear ,Sewerage Canal ,Dar Road ,Dinakaran ,
× RELATED குப்பையில் விழுந்த 2 பவுன் நகையை மீட்டு ஒப்படைப்பு