அரியலூர் : அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் சார்பில் தேசிய அளவிலான தொழில் முறை குத்துச்சண்டை வீரர்களுக்கான போட்டிகள் நடைபெற்றது. இப் போட்டிகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இப் போட்டியில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா பஞ்சாப் சிக்கிம் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த 22 வீரர்கள் கலந்து கொண்டனர் இதில் வீரர்களின் எடைகளுக்கு ஏற்ப 11 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் தேசிய அளவில் குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.
இப் போட்டிகள் தமிழ்நாடு குத்துச் சண்டை சங்கத்தின் புரமோட்டர் ரஜினிகாந்த் மற்றும் இந்திய குத்துச்சண்டை சம்பேளனத்தின் மேற்பார்வையாளர் மணிந்தர்சிங் மேற்பார்வையில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சுழற் கோப்பைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடு செய்த மாவட்ட செயலாளர் ராஜேஷ் , மாவட்ட குத்து சண்டை அமைப்பின் கௌரவத் தலைவர் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சந்திரசேகர் மற்றும் மணிகண்டன் செயற்குழு உறுப்பினர் விஜய் விளையாட்டு வீரர் விளையாட்டு வீரர் முரளிகோல்டன் ஹாஸ்பிட்டல் பொன்மணி, மருத்துவர் முகமது ரியாஸ், திமுக மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் லூயி கதிரவன், திமுக நகரச் செயலாளர் முருகேசன், திமுக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் அருண் ராஜா , திமுக மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் சுஜித் கலந்து கொண்டனர்.இதில் வெற்றி பெறும் வீரர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் குத்துச்சண்டை வீரர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெறுவார்கள் இப் போட்டிகளை பொதுமக்கள் ஏராளமானோர் பார்த்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
The post தேசிய அளவிலான தொழில் முறை குத்துச்சண்டை வீரர்களுக்கான போட்டி appeared first on Dinakaran.