×

ஓசூரில் கடும் குளிருடன் பனிமூட்டம் அதிகரிப்பு

ஓசூர், நவ.11: ஓசூர் பகுதியில், குளிருடன் பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். ஓசூரில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கடும் குளிர் நிலவும். கடந்த சில நாட்களாக, ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை, ஓசூர் பகுதியில் கடும் குளிருடன் பனிமூட்டம் காணப்பட்டது. சாலையை மறைத்த பனிமூட்டத்தால்,+ வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர். சென்னை, சேலம் போன்ற பகுதிகளில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற லாரிகள் மற்றும் பஸ்கள் பனி மூட்டத்திற்கு இடையே சென்ற காட்சி ரம்மியமாக காணப்பட்டது. பனியை பொருட்படுத்தாமல் நடைபயிற்சி செய்பவர்கள், விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து ஆடினர்.

The post ஓசூரில் கடும் குளிருடன் பனிமூட்டம் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Hosur ,
× RELATED குப்பையில் விழுந்த 2 பவுன் நகையை மீட்டு ஒப்படைப்பு