×

ஓசூரில் ஆடிட்டர் வீட்டில் தீ விபத்து

ஓசூர், நவ.11: ஓசூரில், ஆடிட்டர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓசூர் அரசு மருத்துவமனை பின்புறத்தில், தாலுகா அலுவலகம் செல்லும் சாலையில் பேட்டராயசாமி(70) என்பவருக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு உள்ளது.

இவர் கீழ்தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முதல் மற்றும் 2ம் தளத்தில் ஆடிட்டர் அலுவலகமாக பயன்படுத்தி வந்தார். நேற்று குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார். முதல் தளத்தில் அவரிடம் வேலை செய்யும் பணியாளர்கள் ஆடிட்டிங் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது கீழ் தளத்திலிருந்து புகை வருவதை பார்த்த பணியாளர்கள், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் அடுக்குமாடி முழுவதும் தீ பரவி கரும்புகை வெளியேறியது.

பின்னர், 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. தீ விபத்து குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓசூரில் ஆடிட்டர் வீட்டில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Hosur ,Hosur Government Hospital ,Patarayasamy ,Dinakaran ,
× RELATED குப்பையில் விழுந்த 2 பவுன் நகையை மீட்டு ஒப்படைப்பு