கேடிசி நகர், நவ. 10: மானூர் அருகே கரம்பையைச் சேர்ந்தவர் ஜான்சன். இவருக்கும், பாளை. சிவந்திபட்டி அருகே குத்துக்கல் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் சிவசக்தி என்ற பெண் குழந்தை இருந்தது. ஜான்சன், கொடைக்கானலில் ஒரு தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆபரேட்டராக அங்கு தங்கி வேலை பார்த்து வருகிறார். மாதத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வார். இதனால் மனைவி குத்துக்கல்லில் உள்ள பெற்றோர் வீட்டில் குழந்தையுடன் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தூங்கிய குழந்தை சிவசக்தி திடீரென்று அழுதாள். குழந்தைக்கு பால் கொடுத்த பின்னர் ஏப்பம் விடுவதற்குள் மீண்டும் தூங்க வைத்து விட்டதாக தெரிகிறது. இதையடுத்து குழந்தை சிறிது நேரத்தில் வாந்தி எடுத்தது. பின்னர் மயங்கிய குழந்தை சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.
The post நெல்லை அருகே ஒன்றரை வயது குழந்தை திடீர் சாவு போலீசார் விசாரணை appeared first on Dinakaran.