மேலும் influenza a நிமோனியா மற்றும் கோவிட் 19 வைரஸ்களும் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சீன அரசு நெருக்கடி நிலையை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. ஹெச்.எம்.பி.வி வைரஸ் ஃப்ளூ காய்ச்சல் அறிகுறிகளையும் கோவிட் 19 நோய் அறிகுறிகளையும் கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளன. குழந்தைகள் மருத்துவமனைகளில் நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சீன நோய் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிமோனியா பரவலை கண்காணித்து வருவதாகவும் எங்கிருந்து அது தோன்றியது என ஆய்வு நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post சீனாவில் கொரோனா தோன்றி 5 ஆண்டுகளுக்கு பின் புதிய வைரஸ் தொற்று பரவல் : மருத்துவமனைகள், தகன மேடைகள் நிரம்பி வழிவதாக தகவல்!! appeared first on Dinakaran.