இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த உடனடித் தகவல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. நிலநடுக்கம் கடற்கரை நகரத்தில் ஏற்பட்டிருந்தாலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.மேலும், தஜிகிஸ்தானில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.44 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனிடையே சிலி நாடு பசிஃபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனும் பகுதியில் அமைந்துள்ளது. பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் என்பது பசிபிக் பெருங்கடலின் படுகையில் உள்ள ஒரு முக்கிய பகுதியாகும், அங்கு பல பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் அந்தப் படுகையில் அமைந்துள்ள சிலியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாகவே இருக்கிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு சிலி நாட்டில் 8.8 ரிக்டரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 526 பேர் உயிரிழந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.
The post சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி; ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு!! appeared first on Dinakaran.