இவ்வழக்கின் விசாரணைகள் முடிவுற்ற நிலையில் நியூயார்க் நீதிமன்ற நீதிபதி ஜுவான் மெர்ச்சென் பிறப்பித்த உத்தரவில், ‘டிரம்பிற்கு எதிரான வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு மற்றும் தண்டனை விபரங்கள் வெளியிடப்படும்’ என்று அறிவித்துள்ளார். நீதிபதியின் இந்த உத்தரவு, அமெரிக்கா அதிபராக பதவியேற்கவிருக்கும் டிரம்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அவரது கட்சியான குடியரசு கட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளது. எவ்வாறாயினும், டிரம்ப் சிறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது என்கின்றனர். அவர் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது. எப்படியாகிலும் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதால், தண்டனை பெற்ற ஒருவர் அதிபராக பதவியேற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
The post அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள நிலையில் ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த டிரம்புக்கு 10ம் தேதி தண்டனை: நியூயார்க் நீதிமன்ற அறிவிப்பால் அரசியல் பரபரப்பு appeared first on Dinakaran.