முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரில் செயல்படுத்தக்கூடிய திட்டங்களும் மக்களுக்கான திட்டங்கள்தான். மக்களுக்கான திட்டங்களை இந்த அரசு செய்ததை போல இதுவரை எந்த அரசும் இந்தியாவிலே செய்ததில்லை. இதை எங்களால் நெஞ்சை நிமிர்த்தி சொல்ல முடியும். எடப்பாடி பழனிச்சாமி ஏதாவது திட்டங்களை அவரால் சொல்ல முடியுமா? எந்த வகையிலும் 2026 களம் மாறாது. இந்தியா கூட்டணி வெல்லும்.
கூட்டணி ஆட்சி அமையும் என்று அன்புமணி ராமதாஸ் பகல் கனவு கண்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. நிச்சயம் எங்களது கூட்டணி வென்று எங்களது ஆட்சி தான் அமையும். மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று புதிய வரலாற்றை படைப்பார். கூட்டணியை பிரிப்பதற்கு யார் எந்த சதி வேலைகளை செய்தாலும் எங்களுடன் இருப்பவர்கள் நட்போடும், பாசத்தோடும் இருப்பவர்கள்.
எந்த சதி வேலைகளிலும் அவர்கள் சிக்க மாட்டார்கள். நிச்சயமாக திருமாவளவனும் கூட்டணியில் நீடிப்பார். விஜய் கட்சியை பார்த்து நாங்கள் பயப்பட வேண்டிய அவசியமும் கிடையாது, பயமும் கிடையாது. மடியில் கணமும் இல்லை, வழியில் பயமும் இல்லை. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. இவ்வாறு அவர் கூறினார்.
The post கூட்டணியை பிரிக்கும் சதி நிறைவேறாது எடப்பாடி, அன்புமணி கனவு பலிக்காது: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.