பணமதிப்பிழப்பு நடவடிக்கை சிறுகுறு தொழில்கள் மற்றும் முறைசாரா துறைகளை அழித்ததன் மூலம் ஏகபோகங்களுக்கு வழிவகுத்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதும், ஊழல் மற்றும் கருப்புப் பணத்தைத் தடுக்க பணப் பரிவர்த்தனைகளைக் குறைப்பதும் அப்போது அரசு கூறிய காரணங்களில் ஒன்று. ஆனால் பணமதிப்பு நீக்கம் அமல்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்தியாவில் இன்று அதிக ரொக்க பரிவர்த்தனை நடக்கிறது.
வணிகங்களுக்கு அச்சம் தரும் சூழலை உருவாக்கும் திறமையற்ற மற்றும் தவறான நோக்கங்களைக் கொண்ட கொள்கைகள் இந்தியாவின் பொருளாதாரத் திறனை முடக்கும். எனவே நாடு முழுவதும் நேர்மையான, நியாயமான வணிகங்களின் ஆற்றலை, சுதந்திரமாக வளர்க்கும் புதிய ஒப்பந்தம் தேவை. இவ்வாறு தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ்யாதவ் கூறுகையில்,’ பா.ஜ தனது கொள்கைகள் மற்றும் திட்டங்களால் நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிட்டது.
இந்தியப் பொருளாதார வரலாற்றில் பணமதிப்பு நீக்கம் குறித்த ஒரு முழு அத்தியாயமும் கருப்பு எழுத்துக்களில் எழுதப்படும். இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தோல்வியால் இது நடந்ததா அல்லது பாஜகவின் எதிர்மறை கொள்கையால் இது நடந்ததா என்று மக்கள் கேட்கின்றனர். ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பாஜ மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.
* மணிப்பூரை பாஜ எரித்து விட்டது
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு லோஹர்டகாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது: பாஜ மணிப்பூரை எரித்து மக்களை மத அடிப்படையில் பிரிக்க முயற்சித்தது. அது இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களை ஒருவருக்கொருவர் எதிராகத் தூண்டியது. சமீபத்தில் நடைபெற்ற அரியானா தேர்தலில், ஜாட் அல்லாதவர்களுக்கு எதிராக பாஜ ஜாட் இன மக்களைத் தூண்டியது.
ஆனால் பழங்குடியினர் மற்றும் தலித்துகளுக்காக நான் குரல் எழுப்பும்போது, இந்தியாவைப் பிரிப்பதாக பாஜ குற்றம் சாட்டுகிறது. இந்தியாவை ஒருங்கிணைத்து வலுப்படுத்த நான் இங்கு வந்துள்ளேன். இந்திய மக்கள் தொகையில் 90 சதவீதம் உள்ள பழங்குடியினர், தலித்துகள், ஓபிசிக்கள் ஆட்சியில் பங்கெடுப்பது தொடர்பாக நான் குரல் எழுப்பியது தவறு என்றால் நான் அதைத் தொடர்ந்து செய்வேன்’ என்றார்.
The post சிறுகுறு தொழில்களை அழித்து ஏகபோகத்திற்கு வழிவகுத்த ரூபாய் நோட்டு தடை: 8ம் ஆண்டு தினத்தில் ராகுல்காந்தி விளாசல் appeared first on Dinakaran.