மணிப்பூரின் மக்கள்தொகையில் சுமார் 53 சதவீதம் கொண்ட மெய்டீஸ் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். அதே போல் நாகா மற்றும் குக்கிகள் அடங்கிய 40 சதவீத பழங்குடியினர் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர். மணிப்பூரில் ஒரு ஆண்டுக்கும் மேலாக வன்முறைகள் ஏற்பட்டு அமைதி திரும்பி வரும் நிலையில் தற்போது அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஜெய்ரோன் ஹேமர் கிராமத்தில் நேற்றுமுன்தினம் ஆயுதங்களுடன் புகுந்த ஒரு கும்பல் அங்கிருந்த பழங்குடி மக்களை தாக்கி,அவர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில்,‘‘இந்த தாக்குதலில் 6 வீடுகள் சேதமடைந்தன’’ என்றனர். இந்த தாக்குதலின் போது பழங்குடியின பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக குக்கி இன அமைப்பு தெரிவித்துள்ளது.
The post மணிப்பூரில் பயங்கரம் 6 வீடுகள் எரிப்பு பழங்குடி பெண் பலி appeared first on Dinakaran.