அதேபோல், வக்பு வாரியத்தை திருத்த அமைக்கப்பட்ட கமிட்டியின் தலைவர், அக்கமிட்டியின் உறுப்பினர்களின் கருத்தை கேட்காமலேயே அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். நடிகர் விஜய்யின் புதிய கட்சி மற்றும் அவரது அறிவிப்புகளால் திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் ஏற்படவில்லை. அவர் தனது கட்சியின் கொள்கைகளை கூறி, பிற கட்சிகளை கூட்டணிக்கு அழைக்க வேண்டும். ஆனால் அவர் ஆட்சியில் பங்கு இருப்பதாக கூறி அழைப்பு விடுப்பது தவறு. இது, பிற கட்சியினர் பதவியை தேடி ஓடிக் கொண்டிருப்பதாக கூறுவது போலவும், அவர்களை இழிவுபடுத்துவதும் போலவும் உள்ளது. இவ்வாறு கூறினார்.
The post கொள்கையை சொல்லி அழையுங்கள் ஆட்சியில் பங்கு தருவதாக கட்சிகளை இழிவு படுத்தாதீங்க: நடிகர் விஜய்க்கு கே.பாலகிருஷ்ணன் அட்வைஸ் appeared first on Dinakaran.