காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் பள்ளம் படுகுழியுமான சாலை : சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குருவிமலை பகுதியில் பள்ளம் படுகுழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பாலாறு பகுதியில் இருந்து வளத்தோட்டம் கிராமத்திற்கு செல்லும் பிரதான தார்ச்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக வசந்தம் நகர், வளத்தோட்டம், கேஎஸ்பி நகர், பல்லாவரம் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு ஏராளமானோர் தினந்தோறும் சென்று வருகின்றனர்.

இச்சாலை சேதமடைந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் சாலையில் உள்ள சிறிய பள்ளங்களில் தண்ணீர் தேங்கி ஜல்லிகற்கள் பெயர்ந்து பள்ளம் படுகுழியுமான சாலை மீண்டும் சேதமடைந்துள்ளது.

குருவிமலையில் இருந்து வளத்தோட்டம் வரை சாலை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, மேடு பள்ளமாக மாறியுள்ளது. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். மேலும், மழை நேரங்களில் சேதமடைந்த சாலை பள்ளத்தில், மழைநீர் தேங்குவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். மேலும், சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் நடந்து செல்வோரின் ஆடைகளில் சேற்றுநீர் தெளிக்கிறது.

எனவே, சேதமடைந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் குருவிமலை பகுதியில் பள்ளம் படுகுழியுமான சாலை : சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: