அண்ணாமலை லண்டன் சென்றால், அவரின் தலைவர் பதவி பறிக்கப்படும் என்று கட்சியில் ஒரு கருத்து நிலவியது. இதற்காக தலைவர் பதவியை பிடிக்க மூத்த தலைவர்கள் பலர் போட்டிப்போட்டனர். ஆனால், அண்ணாமலையின் தலைவர் பதவி பறிக்கப்படவில்லை. இதற்கிடையில் அண்ணாமலை லண்டன் சென்றதால், பாஜ நிர்வாகிகளை ஒருங்கிணைத்து வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு ஒன்றை மட்டும் பாஜ மேலிடம் அறிவித்தது.
அதன்படி, கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வழிநடத்த தேதிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், லண்டன் சென்றுள்ள அண்ணாமலை, அரசியல் படிப்பை முடித்துவிட்டு வருகிற 28ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 28ம் தேதி தமிழகம் வரும் அண்ணாமலை, டிசம்பர் 1ம் தேதி கோவையில் நடைபெறும் பாஜ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், கடந்த மக்களவை தேர்தலின் போது நடத்திய ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தை போல, ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் நடைபயணம் மேற்கொண்டு கிராம மக்களை சந்திக்க அண்ணாமலை திட்டமிட்டிருப்பதாக பாஜ வட்டாரத்தில் கூறப்படுகிறது.
The post லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு அண்ணாமலை 28ம் தேதி தமிழகம் திரும்புகிறார்: கிராமம்தோறும் நடைபயணம் செல்ல திட்டம் appeared first on Dinakaran.