ஊட்டி மலை ரயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து

கோவை: மேட்டுப்பாளையம்- உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. சீரமைப்பு பணி முடிவுறாததால் மேலும் 2 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து என அறிவித்துள்ளது.

ஊட்டி, குன்னூர் பகுதியில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளன. மலைப்பாதை, ராணுவ பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்தன. அதனை தீயணைப்புத்துறையினர் விரைந்து அகற்றி போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே, கல்லாறு – குன்னூர் ரயில் நிலையங்களுக்கு இடையே மண்சரிவு ஏற்பட்டதால் ஊட்டி – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை 5-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருந்தது. இன்று மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேலும் 2 நாட்களுக்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது.

மலை ரயில் பாதையை சீரமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால் இன்று மற்றும் நாளை என 2 நாட்களுக்கு ரயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post ஊட்டி மலை ரயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து appeared first on Dinakaran.

Related Stories: