×

பெருமாள் கோயிலில் பால்குட ஊர்வலம்

 

போச்சம்பள்ளி, நவ.5: போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி கிராமத்தில், சென்றாய பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து 48வது நாள் மண்டல பூஜை நடந்தது. இதன் நிறைவு நாளை முன்னிட்டு பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பால்குடம் எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று சென்றாய பெருமாளுக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

விழாவில், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரிசங்கர், கவுன்சிலர் வடிவேல், ஊராட்சி மன்ற தலைவர்கள் மாதவி முருகேசன், விமலா பெரியசாமி, பாஸ்கர் மற்றும் மணி, சுரேஷ், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில், 5 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து கிராம மக்கள் ராமேஸ்வரம் புறப்பட்டு சென்று, சிறப்பு பூஜை செய்ய உள்ளனர்.

The post பெருமாள் கோயிலில் பால்குட ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Balkuta procession ,Perumal temple ,Bochambally ,Papparapatti ,Gangaya ,Perumal ,Mandal Pooja ,
× RELATED வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்