டெல்லி: கேரளா, பஞ்சாப், உ.பி. மாநிலங்களில் உள்ள 14 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவ.13-ம் தேதிக்குப் பதில் நவ.20-ம் தேதி 14 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும். பண்டிகைகள் உள்ளிட்டவை காரணமாக வாக்கு சதவீதம் பாதிக்கும் என்பதால் தேர்தல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நவ.23-ம் தேதி நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
The post 14 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி மாற்றம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு appeared first on Dinakaran.