மும்பை: மகாராஷ்டிரா பொதுத்தேர்தலை ஒட்டி மும்பையில் வரும் 6ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அறிவிக்கிறார். உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.