மக்களவை தேர்தலில் சூதாட்டம் ஆன்லைன் நிறுவனத்தின் 4 கோடி சொத்து பறிமுதல்

புதுடெல்லி: துபாயில் இருந்து செயல்படும் பேர்பிளே எனும் ஆன்லைன் பெட்டிங் நிறுவனம், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பியதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்நிறுவனம் கடந்த 2024 மக்களவை தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என ஆன்லைன் சூதாட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் செயல்பாடுகளால் தங்களுக்கு ரூ.100 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மற்றொரு தனியார் மீடியா நிறுவனம் அளித்த புகாரின் பேரில் மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.கடந்த 25ம் தேதி மும்பை மற்றும் குஜராத்தின் கட்ச் பகுதியில் பேர்பிளே நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. இதில், ரூ.4 கோடி மதிப்புள்ள ரொக்கம், வங்கி டெபாசிட்கள், வெள்ளிக் கட்டிகள் மற்றும் ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் அசையா சொத்து தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

The post மக்களவை தேர்தலில் சூதாட்டம் ஆன்லைன் நிறுவனத்தின் 4 கோடி சொத்து பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: