மேலும் பேசிய அவர், “தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் அடி எடுத்து வைக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்; லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. பிஜேபி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கூட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமனக் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட அரசின் மூலம் 26,000 இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ள ஹரியானாவில் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது. ஹரியானாவில் பாஜக அரசுக்கு என தனி அடையாளம் உள்ளது; பிரதமரின் உள்ளக பயிற்சித் திட்டத்தின் கீழ், நாட்டின் 500 முன்னணி நிறுவனங்களில் ஊதியத்துடன் கூடிய உள்ளகப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,”என்றார்.
குஜராத் மாநிலம் வதோதராவுக்கு நேற்று தாம் சென்றதை நினைவு கூர்ந்த பிரதமர், பாதுகாப்புத் துறைக்கான விமான உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கி வைத்தது பற்றியும் குறிப்பிட்டார். ஆயிரக்கணக்கான குடிமக்கள் நேரடி வேலைவாய்ப்பைப் பெறுவார்கள் என்றும், உதிரி பாகங்கள் மற்றும் பிற உபகரணங்களை உற்பத்தி செய்வதன் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் பெருமளவில் பயனடையும் என்றும்அவர் கூறினார். இந்திய இளைஞர்கள் வெளிநாடுகளில் வேலை பெறுவதை எளிதாக்க மத்திய அரசு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாக தெரிவித்த பிரதமர், வளைகுடா நாடுகளைத் தவிர, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, மொரீஷியஸ், இஸ்ரேல், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகள் உட்பட 21 நாடுகளுடன் குடிபெயர்வு மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான ஒப்பந்தங்களில் இந்தியா சமீபத்திய ஆண்டுகளில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறினார்.
The post நாட்டின் இளைஞர்களுக்கு அதிகபட்ச வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பது எங்களது உறுதிப்பாடு: பிரதமர் மோடி உரை appeared first on Dinakaran.
